மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வரி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக 1 ரூபாய் உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு காணப்படுகிறது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையானது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 67 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனையானது.
ஆனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 57 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை 2 ரூபாய் 52 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 48 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீது வரி உயர்வு அறிவிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணமாகும். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் இருசக்கர வாகனங்களில் அலுவலகம் செல்வோர், நடுத்தர மக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?