உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நாளையுடன் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைகின்றன. ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன. நான்காவது இடத்தை பிடிக்கும் அணி யார் என்பது கேள்வியாக இருந்தது. 11 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டில் இருக்கும் நியூசிலாந்து அணி 99 சதவீதம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 313 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணிக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் என கூறப்பட்டது. அது நடக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்பது தெரிந்ததுதான். ஏனெனில் பங்களாதேஷ் அணியும் வலுவாகதான் இருக்கிறது.
இந்நிலையில், இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இதனால், பங்களாதேஷ் அணியை 7 ரன்னில் ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்ற கட்டாயம் பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டது. 316 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் பங்களாதேஷ் அணி 26 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
பங்களாதேஷ் அணி 8 ரன் எடுத்த போதே பாகிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைவது உறுதியானது. அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மோதுகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டி: மான்சென்ஸ்டர் - ஜூலை 9
இரண்டாவது அரையிறுதி : பிர்மிங்காம் - ஜூலை 11
முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் மற்றும் நான்காவது இடம்பிடிக்கும் அணிகள் மோதவுள்ளன. அநேகமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள்தான் மோதும். அதேபோல், இரண்டாவது அரையிறுதியில் 2, 3 ஆவது இடங்களை பிடித்த அணிகள் மோதும். அதில், இந்தியா, இங்கிலாந்து அணிகள்தான் மோதும்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ