“பங்களாதேஷ் 7 ரன்னில் ஆல் அவுட் ஆனால்....” - 315 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 315 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


Advertisement

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாடி 400 ரன்கள் எடுப்பார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். குறைந்தபட்சம் 350 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஏனெனில் 316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெறவேண்டும்.

                  


Advertisement

ஆனால், தொடக்கத்திலே ஃபாகர் சமான் 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், இமாம் உல் ஹாக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 146 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து இந்த ஜோடி வலுவான அடித்தளம் அமைத்தது. ஆனால், இருவரும் மிகப்பெரிய ஷாட்களை தேர்வு செய்யவில்லை. குறிப்பாக சிக்ஸர்களே அடிக்கவில்லை. ரன் ரேட் 6க்கும் குறைவாகவே சென்றது. சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் 98 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சதம் விதம் அடித்த இமாம்-உல்-ஹாக் ஹிட் விக்கெட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 

          

இந்த ஜோடியின் ஆட்டமிழப்பால் பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. முகமது ஹபீஸ் 27, சோஹைல் 6 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சர்பராஸ் அகமது 2 ரன் எடுத்த போது காயம் காரணமாக ரிட்டயர் ஹட் ஆனார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இமாத் வாசிம் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. 


Advertisement

          

பங்களாதேஷ் அணியில் முஸ்தபிகூர் ரஹ்மான் 5 விக்கெட் சாய்த்தார். சைஃபுதீன் 3 விக்கெட் எடுத்தார். 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி விளையாடும். பாகிஸ்தான் அணிக்காக அரையிறுதி வாய்ப்பு இனியும் இல்லை. ஏனெனில் பங்களாதேஷ் 7 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தால் மட்டுமே அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் அதற்கு வாய்ப்பு இல்லை. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement