ஜியோ நிறுவனத்தின் ‘டிஜிட்டல் உடான்’ புதிய திட்டம்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதிதாக இணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு இணையதளம் உபயோகம் குறித்து பயிற்சியளிக்க ‘டிஜிட்டல் உடான்’ என்ற திட்டத்தை ஜியோ நிறுவனம் தொடங்கவுள்ளது. 


Advertisement

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. அத்துடன் பெருவாரியான வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக ஜியோ நிறுவனம் உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் குறைந்த விலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையை வழங்கி வருகிறது. 


Advertisement

இந்நிலையில் இணையதளம் பயன்படுத்துவது குறித்து பயிற்றுவிக்க ‘டிஜிட்டல் உடான்’ என்ற திட்டத்தை ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி ஜியோ மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் இணைந்து இணையதளத்தை பயன்படுத்துவது குறித்து ஆடியோ-வீடியோ பதிவை தயாரித்துள்ளது. இந்தப் பதிவு 10 இந்திய மொழிகளில் அமைந்துள்ளது. 

முதல் கட்டமாக இந்தத் திட்டம் 13 மாநிலங்களிலுள்ள 200 இடங்களில் அமல்படுத்தப்படுகிறது. இதன் பிறகு இந்தத் திட்டம் நாட்டிலுள்ள 7000 இடங்களுக்கு விரிவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை முதலில் ஜியோ போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆரம்பிக்கப்படுகிறது. அதற்குப் பின் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாற்றப்படும் என  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


Advertisement

இந்தத் திட்டத்தின் மூலம்  இணையதள பயன்பாடு குறித்து 100% பொது அறிவை வளர்க்கவும் அதன்மூலம் மக்களிடையே தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 300 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோருக்கு இணையதள பயன்பாடு குறித்து முழுமையாக விழிப்புணர்வு இல்லை. எனவே இந்தத் திட்டம் அவர்களுக்கு போதிய இணையதள பயன்பாடு குறித்த கல்வியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement