[X] Close >

 “சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோகித்” - கோலி பாராட்டு

Rohit-Sharma-is-the--best-one-day-player---Kohli

உலகிலேயே ரோகித் ஷர்மாதான் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் சதம் அடித்தன் மூலம் இந்திய வீரர் ரோகித் சர்மா நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். அத்துடன் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பெற்றார். 


Advertisement

இந்நிலையில் ரோகித் ஷர்மாவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“கடந்த சில வருடங்களாக நான் ரோகித் ஷர்மாவின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். என்னுடைய பார்வையில் உலகிலேயே தலை சிறந்த ஒருநாள் போட்டி வீரர் ரோகித் தான். அவர் நன்றாக விளையாடும் பட்சத்தில் அணியின் ஸ்கோர் கண்டிப்பாக உயரும். தற்போது அவரின் ஆட்டம் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. மேலும் அவரின் ஆட்டம் மற்ற வீரர்கள் முக்கிய ஊக்கமாக அமைகிறது. 

கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்தப் போட்டியில் அவர்களின் போராட்ட குணம் மிகவும் மேலோங்கி இருந்தது. இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close