வலுவான எதிராளிகளை தோற்கடிக்க அதிகாரத்தை தியாகம் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் முடிவை எடுத்ததாக ராகுல் காந்தி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் அவர் வலுவான எதிராளிகளை தோற்கடிக்க அதிகாரத்தை தியாகம் செய்ய வேண்டும், அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து விரிவாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.
கட்சியின் எதிர்காலத்தை கருதியே காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் கட்சிக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே தமக்கு பதில் வேறொருவரை தலைவராக நியமிப்பதுதான் சரியாக இருக்கும். தலைமை மாற்றம் சுமூகமாக நடைபெறுவதற்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்போவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை காப்பாற்ற முழு பலத்துடன் தொடர்ந்து போராடுவேன். அதிகாரத்தில் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொன்று தொட்ட பழக்கமாக இருக்கிறது. யாரும் அதிகாரத்தை தியாகம் செய்வதற்கு தயாராக இல்லை. வலுவான எதிராளிகளை தோற்கடிக்க அதிகாரத்தை தியாகம் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே அதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என அந்த அறிக்கையல் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்