[X] Close >

தனுஷ் பிறந்தநாளன்று வெளியாகிறது விஐபி2

vip2-releases-on-dhanushs-birthday

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2, தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.


Advertisement

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’ (விஐபி).

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்போது விஐபி – 2 தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியுள்ளார். விஐபி 2-விற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.


Advertisement

விஐபி 2 விலும் அமலாபால் தான் கதாநாயகி. சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். மேலும் விஐபி 2-இல் இந்தி நடிகை கஜோல், சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிந்துள்ள நிலையில் விஐபி 2 படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.


Advertisement
Related Tags : vip2vip2
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close