“என்னப்பா மூன்றாவது அம்பயர்” - ரிவ்யூ போனதால் கொந்தளித்த கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் எல்.பி.டபுள்யூ ரிவ்யூ-வில் ஏன் விக்கெட் கொடுக்கவில்லை என அம்பயரிடம் கோலி வாக்குவாதம் செய்தார்.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 104 (92), கே.எல்.ராகுல் 77 (92) மற்றும் ரிஷாப் பண்ட் 48 (41) ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்தஃபிஸுர் ரகுமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Advertisement

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் திணறினாலும், ரன்களையும் அடித்தனர். இதனால் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் இந்திய பவுலர்கள் தீவிரம் காட்டினர். பங்களாதேஷ் அணி 39 ரன்கள் எடுத்திருந்த போது, தமிம் இக்பால் 22 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் பின்னர் வந்த ஷகிப் உல் ஹசனுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் சவுமியா சர்கார் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

அந்த சமயம் முகமத் ஷமி வீசிய 11வது ஓவரின் 2வது பந்து சர்காரின் காலில் பட்டது. அதை அவுட் என இந்திய அணியினர் அப்பீல் செய்தனர். அது விக்கெட் இல்லையா என தோனியிடம் இருந்து உறுதியான தகவல் வருவதற்கு முன்னரே, கோலி ரிவ்யூ ஆப்ஷனை எடுத்தார். நீண்ட நேரம் ரிவ்யூ செய்து பார்த்துவிட்டு பந்து பேட்டில் பட்டதாக விக்கெட் கொடுக்கவில்லை. ஆனால் ரிவ்யூவில் பந்து முதலில் காலில் கட்டியிருந்த மட்டையில் அடித்தது போல தான் இருந்தது. இதனால் கொதித்த கோலி, அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். ‘என்ன தான் மூன்றாவது அம்பயரோ’ எனவும் அவர் வினவினார். பின்னர் 33 (38) ரன்களில் சர்கார் அவுட் ஆனார். ஹர்திக் வீசிய பந்தில் அவர் அடித்த பந்து கோலி கைக்கு சென்றது. அதை கேட்ச் பிடித்த கோலி ‘அவுட்’ என சொன்னார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement