ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, கேப்டன் கிளன் மேக்ஸ்வெல், விர்த்மான் சாஹா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 44 ரன்களும், சாஹா 38 ரன்களும் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
168 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தினர். சுனில் நரைன் 18 ரன்களில் வெளியேறினார். இதன்பின்னர் கொல்கத்தா அணியின் ரன்குவிப்பில் மந்தம் ஏற்பட்டது. கம்பீர் 8 ரன்களிலும், ராபின் உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். மணீஷ் பாண்டே 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் அடித்த கிறிஸ் லின், 84 ரன்களில் ரன் அவுட்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், கொல்கத்தா அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராகுல் திவேதியா, மோகித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Loading More post
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை