கால்பந்து விளையாடிய மாடு! - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாடு ஒன்று கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 


Advertisement

கோவாவில் சில இளைஞர்கள் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாடு, இளைஞர்கள் பந்தை எடுக்கவிடாமல் தன் அருகில் வைத்துக் கொண்டு முகத்தாலும், கால்களாலும் உதைத்து விளையாடியது. அதன்பின்பு அந்த இளைஞர்கள் பந்தை மாட்டிடம் இருந்து எடுக்க முயற்சிக்கின்றனர்.


Advertisement

ஆனால் பந்தை எடுக்க விடாமல் மாடு தன் கால்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு நகர்த்தி நகர்த்தி விளையாடுகிறது. ஒருகட்டத்தில் மாட்டிடம் இருந்து பந்தை எடுத்த இளைஞர்கள் உதைத்து விளையாட தொடங்கினர். விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாடு, பந்தை துரத்தி துரத்தி விளையாட தொடங்கியது.

இளைஞர்களுடன் இணைந்து பந்தை துரத்திச் சென்று உதைக்க முயன்ற காட்சி இணையத்தில் அதிகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து ’சூப்பர் மாடு’ என்றும், ’கால்பந்து மாடு’ என்றும் பதிவிட்டு வருகின்றனர்

வீடியோ:


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement