போதையில் இ-செல்லான் மிஷினை திருடிய இளைஞர் மீது வழக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடிபோதையில் காவல்துறையினரின் இ-செல்லான் மிஷினை திருடி சென்றதாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை மடிப்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு சிக்னல் அருகில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார்(42) என்பவர் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்துள்ளார்.  அவரை நிறுத்தி சோதனை செய்தபோது உதவி ஆய்வாளர் கனகராஜூக்கும் மது போதையில் இருந்த செந்தில் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

பின்னர் எதிர்பாராதவிதமாக இ-செல்லான் கருவியை எடுத்துக்கொண்டு செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அவரைப் பின் தொடர்ந்துவிரட்டிச் சென்று பிடித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கனகராஜ், செந்தில்குமாரை அருகிலுள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் விசாரணையை மேற்கொண்ட பள்ளிக்கரணை காவல்துறையினர் செந்தில்குமார் மீது பொது சொத்தை சேதம் விளைவித்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement