மழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி

மழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி
மழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி

மழை வேண்டி சென்னையில் 150-க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மழை இல்லாமல் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் மழை வேண்டி சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ருங்கேரி மடத்தில் 150-க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் மூலம் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன் , பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

மழை தரக்கூடிய ராகமான அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட கர்நாடக இசை ராகங்களை பாடி வருகின்றனர். காலை 9 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 9 மணி வரை 12 மணி நேரம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே மழை வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் யாகங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது இசைக் கலைஞர்கள் மூலம் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com