ஆஸ்திரேலியாவின் குவாண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜாய்ஸ் முகத்தில் அடையாளம் தெரியாத நபர் ’பை’ என்ற உணவுப்பொருளை தேய்த்தும், அவர் கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆஸ்திரேலியாவின் அரசு விமான நிறுவனமான குவாண்டஸ்-ன் தலைமை அதிகாரி ஜாய்ஸ் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக மேடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு பெரியவர், திடீரென தன் கையிலிருந்த ‘பை’ எனப்படும் உணவுப் பொருளை, ஜாய்ஸ்-ன் முகத்தில் வைத்து தேய்த்துவிட்டு, சாதாரணமாக மேடையைவிட்டு கீழிறங்கிச் சென்றார். இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், ஜாய்ஸ் ஆரம்பத்தில் சிறிது அதிர்ச்சியடைந்தாலும், சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு அந்த சம்பவம் குறித்து நகைச்சுவையாக பேச ஆரம்பித்தார். அவரின் இந்த நடவடிக்கை அனைவரின் மனதையும் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசும் போதும், நகைச்சுவையாகவே ஜாய்ஸ் பேசினார்.
இந்த சம்பவம் குறித்து, ட்விட்டரில் பலர் நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் பதிவுகளை இட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'