வங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் 14 ஆயிரம் கோடி - அடேங்கப்பா!

Indian-Banks-system-have--above-14000-Crore-Rupees-of-unclaimed-money

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் யாராலும் உரிமை கோரப்படாமல் பொது மக்களின் டெபாசிட் பணம் 14 ஆயிரத்து 578 கோடி ரூபாய் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement

மக்களவையில் எம்பி ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் தெரிவித்தார். அதில் 2017ம் ஆண்டு உரிமை கோரப்படாத பணத்தின் அளவு 11 ஆயிரத்து 494 கோடி ரூபாயாக இருந்ததது. 2018ல் இது 27% அதிகரித்து 14,578 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரத்து 156 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளதாக அமைச்சர் தன் பதிலில் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

இதே போல காப்பீட்டு நிறுவனங்களிலும் பொது மக்களுக்கு உரிய, உரிமை கோரப்படாத பணம் 18 ஆயிரம் கோடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வங்கிகளில் டெபாசிட் முதிர்வுக் காலம் முடிந்த பின்னரும் 10 ஆண்டுகள் உரிமை கோரப்படாமல் இருந்தால் அது வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்பட்டு விடும் என அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் இதற்குப் பின்பும் பணத்திற்கு உரியவர் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் வட்டியுடன் டெபாசிட் தொகை திரும்பத் தரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement