தோனியை மறைமுகமாக சாடிய வாக்கர் யூனிஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சில சாம்பியன்கள் கூட விளையாட்டு நெறியில் இருந்து தவறிவிட்டதாக வாக்கர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டனர். அத்துடன் அவர்கள் அதிசயமாக இந்திய அணி வெற்று பெறுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஏனென்றால் இங்கிலாந்தை இந்தியா வென்றால். பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால். 

Image result for waqar younis


Advertisement

ஆனாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காரணம் தோனி மற்றும் கேதர் ஜாதவின் பொறுமையான ஆட்டம் தான் என ரசிகர்கள் சாடினர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாக்கர் யூனிஸ், “இது நீங்களே இல்லை. இது உங்கள் வாழ்க்கைக்கு எதிராக இருந்தால் நீங்கள் இப்படி விளையாடி இருப்பீர்களா ? பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்கிறதோ ? இல்லையோ அதை பற்றி நான் கவலைபடவில்லை. ஆனால் விளையாட்டு நெறியில் இருந்து தவறி சில சாம்பியன்கள் கூட தோற்றுவிட்டனர்” என்று கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement