ஃபெர்னாண்டோ அசத்தல் சதம் - 338 ரன்கள் குவித்த இலங்கை அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 338 ரன்கள் குவித்துள்ளது.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டி இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கருணரத்னே மற்றும் குசால் பெராரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கருணரத்னே 32 ரன்களில் அவுட்டாக, பின்னர் வந்த அவிஸ்கா ஃபெர்னாண்டோவுடன் பெராரா ஜோடி சேர்ந்தார். ஆனால் 64 ரன்களில் பெராரா ரன் அவுட் ஆகினார்.


Advertisement

தொடர்ந்து விளையாடிய ஃபெர்னாண்டோ சதம் அடித்து, 104 (103) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கிடையே மேத்தீவ்ஸ் 26 (20) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதிவரை அவுட் ஆகாத திரிமன்னே 45 (33) ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement