[X] Close >

பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு 4 டயர்களில் ஓடும் அரசுப் பேருந்து: வீடியோ

Dangerous-bus-ride-in-covai

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று 4 டயர்களில் மட்டுமே இயக்கப்படுவதை பொதுமக்கள் செல்போன் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். இது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பேருந்தின் பின்புறம் 4 டயர்கள் பொருத்தப்படுவதற்கு பதிலாக இரு டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்படுகின்றது. 


Advertisement

வழக்கமாக பேருந்துகளின் பின்பகுதியில் எடையை தாங்கும் விதமாக பேருந்துகளின் பின் பகுதியில் 4 டயர்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவது வழக்கம். ஆனால் குறிப்பிட்ட அரசு பேருந்தில் 2 டயர்கள் மட்டுமே பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இன்றைய தினம் அந்த பேருந்து பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் போது அந்த பேருந்தின் பின் காரில் வந்த நபர் ஒருவர் அதை செல்போன் மூலம் காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளார். 

இது குறித்த புகார் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலட்சியமாக செயல்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கும் அரசு பேருந்து பாதுகாப்பற்ற முறையில் அரசு நிர்வாகத்தால் இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ:

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close