[X] Close >

மாறி மாறி பேசும் சி.வி.சண்முகம்

CV-Shanmugam-confused-talks

முன்னாள் முதலமைச்‌சர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக வசைபாடியும், அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து முரணான கருத்துகளைக் கூறி வருகிறார்.


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ஓபிஎஸ் ஒரு பச்சத்துரோகி என கூறியிருந்தார். ஆனால் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி பேசிய அவர், ஓபிஎஸ் எப்போது வந்தாலும் பேசுவோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதே பன்னீர்செல்வம்தான். அவர் மீதான ஊழல் புகார்கள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு ஓபிஎஸ் பதிலளிப்பாரா? என கேள்வி எழுப்பிய சி.வி.சண்முகம் இப்படி தொடர்ச்சியாக மாறுபட்ட கருத்துகளை பேசி வருகிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close