எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 


Advertisement

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். 


Advertisement

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாயிரத்து 500 வாகனங்களுக்கு சங்கத்தின் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டது‌. ஆனால், நான்காயிரத்து 800 வாகனங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் வழங்கி‌ன. இதனால் மீதமுள்ள 700‌ வாகனங்களுக்கு பணி ஒப்பந்தம் வழங்குமாறு சங்கத்தின் சார்பில் பல முறை எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை‌. இதனையடுத்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement