முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்

Dispute-between-CM-and-Opposition-Leader-in-TN-assembly

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.


Advertisement

தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன், நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக அதிக வாக்குகளுடன் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.


Advertisement

அதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக நிறைவேற்ற முடியாத பெய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து திமுக வாக்குகளை பெற்றுள்ளது என்றார். முதலமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதை வைத்து பொய்யான வாக்குறுதி என்கிறீர்கள்? திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றார்.

அதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இதைத்தான் நெடுநாட்களாக சொல்லிக் கொண்டு வருகிறீர்கள். மத்தியிலும் ஆட்சி, மாநிலத்திலும் ஆட்சி என்று சொன்னீர்கள். ஆனால் தேர்தலில் மக்கள் உங்களை தொங்கலில்விட்டு விட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத திமுக, இப்போது இந்த வெற்றியை பெற்றிருக்கிறது என்றால் எங்களாலும் நிச்சயம் வெல்ல முடியும் என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement