சென்னையில் சம்பள பாக்கி தராததால் உணவு விடுதியின் உரிமையாளரை சரமாரியாக வெட்டிய புகாரில் மேலாளர் மற்றும் பங்குதாரர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பழனிநாதன் மற்றும் எஸ்.செந்தில் ஆகியோர் இணைந்து உணவு விடுதி நடத்தி வருகின்றனர். அங்கு பணிபுரிந்து வந்த மேலாளர், ஊதியப் பிரச்னை காரணமாக பணியில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உணவு விடுதியின் முன்பு நின்று தனது நண்பர்களுடன் பழனிநாதன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்குவந்த மேலாளராக இருந்தவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனிநாதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் பழனிநாதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர். மேலும் விசாரணையில், பழனிநாதனின் பங்குதாரராக இருந்த செந்திலின் தூண்டுதல் காரணமாக தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்தனர். மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?