கிரிக்கெட் மட்டையால் அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ. விடுதலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ, ஜாமினில் இன்று விடுதலையானார்.


Advertisement

இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ‌ ஆகாஷ் விஜய்‌வர்கியா, கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அவர் ஆதரவாளர்களும் அரசு அதிகாரிகளை அடித்தனர். 

கட்டடங்களை இடிக்கக் கூடாது என தனது ஆதரவாளர்களுடன் ஆகாஷ் விஜய்வர்கியா கேட்டார், மறுத்ததால் தாம் தாக்கப்பட்டதாக, நகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய்வர்கியா, பாஜக மூத்த தலைவரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன்.


Advertisement

 தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானது. இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆகாஷ் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கப் பட்டதை அடுத்து இன்று காலை விடுதலை ஆனார். அவருக்கு மாலை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement