சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - கைதானவர் தவறிவிழுந்து காயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் கழிவறையில் விழுந்ததில் அவரது கை உடைந்துள்ளது.


Advertisement

சென்னை ஆவடி அருகே வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை என தாயார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், சிறுமியினர் உறவினரும் அண்டை வீட்டைச் சேர்ந்தவருமான மீனாட்சி சுந்தரத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல்துறையினர். அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கொலை செய்துவிட்டு கழிவறையில் உள்ள வாலியில் சாக்கு மூட்டையில் அவர் கட்டி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, மீனாட்சி சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் சடலத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மேலும் மீனாட்சி சுந்தரத்திதின் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் ஒரு கம்மல், கண்ணாடி வளையல்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது. அத்துடன் அவரது வீட்டு ஜன்னல் ஸ்கீரினில் ரத்த கரை படிந்து இருந்தது. அவர் குழந்தையை கொன்று விட்டு பாத்ரூமில் கழுவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீர மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது மனைவியும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் கை உடைந்து கட்டு போட்டிருந்தார். விசாரணையில் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் அவரது கை உடைந்ததாக போலிசார் தெரிவித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement