சென்னையில், ஹெல்மெட் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரும் வழக்கில், இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் காயமுற்று உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு ஏற்கெனவே ஆணையிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை எனில், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் வேலை செய்யாமல் சாலையோரம் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியில், விபத்தில் சிக்கிய 2 காவலர்கள் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டுமென்றும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!