ராகுல் தலைவராக தொடர ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை - வீரப்ப மொய்லி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர ஒரு சதவீதம் வாய்ப்பு கூட இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.


Advertisement

மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் ராஜினாமா செய்து வந்தனர். ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்துவிலகுவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ராகுல் காந்தியை தலைவராக தொடர வேண்டும் என அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுலே தொடர வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ராகுல் காந்தி தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


Advertisement

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர ஒரு சதவீதம் வாய்ப்பு கூட இல்லை என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராகுல் தலைவராக தொடர்வது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டிதான் முடிவு செய்யும். எதுவேண்டுமெனாலும் நடக்கலாம். இன்றைய தருணத்தில் அவர் தலைவராக நீடிக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. இருப்பினும், ராகுல் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் வரையில் இதுபோன்ற அனுமானங்கள் எழுந்தபடிதான் இருக்கும்” என்று கூறியுள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement