நகராட்சி அலுவலரை பேட்டால் தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக இந்தூரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


Advertisement

இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்-3 தொகுதி எம்.எல்.ஏவுமான ஆகாஷ் விஜய்வர்கியா அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். அவர் இடிக்கு பணியை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் எனத் தடுத்தார். 

நகராட்சி அலுவலர்களுக்கும் ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். அத்துடன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அலுவலர்களை தாக்கினார். போலீசார் தடுக்க முயன்ற போது தொடர்ந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டார். தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 


Advertisement

            

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர். நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் பெற முயன்றார். ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டு ஜூலை 7 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில், தன்னுடைய சக ஊழியர் தாக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல், ஆகாஷ்க்கு ஆதரவாக செயல்பட்ட 21 நகராட்சி அலுவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நகராட்சி அலுவலரை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு ஆதரவாக இந்தூரின் பல இடங்களில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையில் ஓரத்தில் ‘சல்யூட் ஆகாஷ் ஜி’ என்ற வாசகத்துடன் இந்த சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகாஷ்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் எனவும் அவரது ஆதரவாளர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் நகராட்சி அலுவலர்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றினர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement