அமமுகவை கட்சியாக பதிவு ! தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமமுக கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி விண்ணப்பித்துள்ளது.


Advertisement

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து தினகரன் தலைமையில் அமமுக கட்சி உருவானது. இந்தக் கட்சியின் சார்பில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டனர். ஏனென்றால் இந்தக் கட்சி அப்போது தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்படவில்லை. 


Advertisement

இந்நிலையில் தற்போது அந்தக் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக ஒரு விளம்பரத்தை அளித்துள்ளது. அதில், “அமமுக என்ற பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் என்றும் பொருளாலர் அன்பழகன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்சி பதிவு செய்யப்படுவது குறித்து ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணைய மின்னஞசலுக்கு அனுப்பலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் பிரதிநித்துவம் சட்டம் 1951-ன் பிரிவு 29ஏயின்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை பதிவு செய்து வருகிறது. ஒரு கட்சி பதிவு செய்ய விண்ணப்பித்தால் அந்த விண்ணபம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளம்பரம் அளிப்பது வழக்கம். அத்துடன் இந்தக் கட்சியின் பெயரில் ஆட்சேபனை இருந்தால் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைய முகவரிக்கு தெரிவிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement