வாஷின் மெஷினில் 5 அடி பாம்பு : அதிர்ச்சியடைந்த உரிமையாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு, சீனிவாசன் நகரைச் சேர்ந்தவர் சார்லஸ். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது வீட்டிலிருந்த துணிதுவைக்கும் இயந்திரத்தை வழக்கம் போல இயக்கியுள்ளனர். அப்போது மெஷின் இயங்காமல் வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. இதனால் மிஷின் ஏதேனும் பழுது அடைந்திருக்குமோ என்று சார்லஸ் சந்தேகம் அடைந்துள்ளார்.

இதையடுத்து டார்ச் லைட் அடித்து இயந்திரத்தின் உட்பகுதியில் பார்த்துள்ளார். அப்போது இயந்திரத்திற்குள் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த சார்லஸ், பாம்பு தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். உனடியாக அங்குவந்த வனத்துறையினர், வாஷின் மெஷினில் சிக்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement