ஹெல்மெட் விவகாரம் : அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னரும் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிவதில்லை, காவல்துறை எடுத்த நவடிக்கைகள் என்ன ? என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என குறிப்பிட்டனர். எடப்பாடியில் இரண்டு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உயிரிழந்ததை சுட்டிக்காட்டி வேதனைப்பட்ட நீதிபதிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் கடற்கரை சாலையோரம் ஓய்வெடுப்பதாகவும் சாடினர். 


Advertisement
loading...
Related Tags : HelmetChennaiHigh Court

Advertisement

Advertisement

Advertisement