தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: தடுத்து நிறுத்தியது ’செல்ஃபி’!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’செல்ஃபி’-யால் உயிரிழப்புகள் நடந்த கதைகளைத்தான் கேட்டிருப்போம். ஆனால், ஒரு செல்ஃபி, ஓர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது, அதிசயமாக!


Advertisement

கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை. வெறுத்துப் போன மணி, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். நேராக, சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.


Advertisement

யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, ‘ரொம்ப வெறுப்பா இருக்கு நண்பர்களே. போதும் வாழ்ந்தது. அதனா ல தற்கொலை பண்ணப் போறேன்’ என்று பேசியபடி செல்ஃபி எடுத்தார். அதை தனது நண்பர்களுக் கு அனுப்பிவிட்டு தண்டவா ளத்தில் படுத்துவிட்டார்.

இதைப் பார்த்த அவர் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, களத்தில் இறங்கிய அவர்கள், மணி எங்கு தண்டவாளத் தில் படுத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர். அதற்காக, அந்த செல்ஃபியை உடனடியாக பல குரூப்களுக்கு அனுப்பினர். செல்ஃபியில், ஒரு மைல் கல் காணப்பட்டது.


Advertisement

அதில் ’82’ என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள இடம் என்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்த கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர், அந்தப் பகுதியை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு ஸ்பாட்டுக்குச் சென்றார். 

தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மணியை உசுப்பி, போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், ‘’எல்லோருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு தற்கொலையா தீர்வு?’’ என்று அவருக்கு நீண்ட கவுன்சிலிங் கொடுத்து, வழக்குப் பதியாமல் அனுப்பி வைத் தனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement