[X] Close >

நக்சல்களை ஒடுக்க 2 ஆயிரம் வீரர்கள்

2-thousand-cobra-crpf-cops

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் வகையில், கோப்ரா படைப் பிரிவைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் அம்மாநிலத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.


Advertisement

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மார்ச் 11 ஆம் தேதி நக்சல்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 12 சி.ஆர்.பி.எப். வீரர்களும், கடந்த மாதம் 24ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்களும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களும் பாதுகாப்புப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், நக்சல்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட கோப்ரா என்ற அதிநவீன படைப் பிரிவைச் சேர்ந்த 2000 வீரர்கள், சுக்மா மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளனர்.


Advertisement
Related Tags : cobra crpfcobra crpf
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close