மேலூரில் விஜய் ரசிகர்கள் இணைந்து தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள், விஜய் பிறந்த நாளையொட்டி, தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
இதற்காக இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ரசிகர்களையும் ஒன்றிணைத்து, மேலூர் சிவகங்கை சாலையில் ‘தளபதி விஜய் விலையில்லா விருந்தகம்’என தொடங்கி, தினமும் பலரது பங்களிப்புடன் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மட்டுமல்லாது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பல பிரிவினர் உதவி பெற்று வருகின்றனர்.
இது குறித்து முதியவர் கொண்டயன், “ரசிகர்கள் என்றால் அவர்களுடைய தலைவரின் பிறந்த நாள்போது மட்டும் உதவி வழங்குவார்கள். ஆனால் இவர்கள் வருடம் முழுவதும் ஏழைகளுக்கு தினசரி காலை உணவு வழங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இது குறித்து விஜய் ரசிகர்கள், “மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் ஒன்றிணைந்து தினமும் 100க்கு மேற்பட்டோர்களுக்கு தரமான காலை உணவை வழங்கி வருகிறோம், இதனை இன்னும் அதிகப்படுத்தி 200க்கும் அதிகமான மக்களுக்கு உணவுகள் வழங்க வேண்டும் என்பது எங்களின் ஆசை” என்றனர்.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி