வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், அடுத்த 5 நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் மழை குறைவு காரணமாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறுகிய இடத்தில் அதிக மக்கள் வாழும் தலைநகர் சென்னையில் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். அண்மையில் ஓரிரு நாட்களில் மழை பெய்ததால் மக்கள் சற்று பெருமூச்சு விட்டுள்ளனர்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’