நியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்

New-Zealand-vs-Pakistan---Toss-delayed-due-to-wet-outfield

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் தாமதம் அடைந்துள்ளது.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மழையால் தாமதம் அடைந்துள்ளது. 6 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இல்லையேன்றால் அது அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். 


Advertisement

எனவே அந்த அணி முழுமூச்சுடன் களம் காணும். அதேசமயம் 6ல் 5 போட்டிகளை வென்று 2வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். எனவே இந்த அணியும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மழையால் தாமதமாகியுள்ள போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஓவர்களில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement