“ஆசிரியர்களே இல்லை; எப்படி நீட் எழுதுவது?” - ஜோதிகா அதிருப்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எப்படி எழுத முடியும் என ஜோதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

‘ராட்சசி’ பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, “ இந்தப் படம் ‘சாட்டை’ படம்போல இருப்பதாகவும், என் கதாபாத்திரம் சமுத்திரக்கனியை போலவும் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதுமாதிரி 100 படங்கள் வந்தாலும் கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து பேச வேண்டியது அவசியமானது. ஏனென்றால் பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எப்படி எழுத முடியும்.


Advertisement

பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒரே மாதிரியாக ஹீரோக்கள் சண்டை போட்டு, காதலித்து, டூயட் பாடும்போது ஒரேமாதிரி இருப்பதாக சொல்லாதவர்கள், இது மாதிரியான படங்களை மட்டும் ஏன் ஓப்பிட்டு பேசுகிறார்கள். எனது இந்தப் பயணத்தில் பெண்களுக்கு மரியாதைக் கொடுக்கும் ஆண்களைப் பார்க்க முடிவது நிறைவாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement