[X] Close

கணினி பயிற்சி மைய வளாகத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் கணினி பயிற்சி மையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த இளம் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் கணினி பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவி ஒருவரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். அந்த நேரத்தில் அருகில் இருந்த சக மாணவர்கள் இந்தச் சம்பவத்தை தடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கத்திக்குத்தை தடுக்க முயன்ற சக மாணவர் இருவர் மற்றும் அந்த மாணவிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதின் அடிப்படையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Advertisement

விசாரணையில் கத்திக்குத்துவுக்கு ஆளானவர் மாணவி அமிர்தா என்பதும், கத்தியால் குத்தியவர் சுரேஷ் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரித்தபோது இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்தாகவும் அதன்பின் ஏற்பட்ட பிரச்சனையில் அமிர்தா சுரேஷிடம் பழகுவதை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்திப்போன்று கூரிய ஆயுதத்தில் குத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement