அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசின் இமாலய ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணியும் போட்டிப் போட்டுக்கொண்டு அரசு கஜானாவை காலி செய்திருப்பது, அடுத்தடுத்து வரும் ஊழல் செய்திகள் மூலம் தெரிய வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இதுவரை டிஜிபி அந்தஸ்தில் இயக்குநர் நியமிக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன் மூலம் ஊழல்கள் குறித்த விசாரணைகளை அதிமுக அரசு தடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டிய விஜிலென்ஸ் கமிஷனர் பதவி இன்னமும் காலியாகவே வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனி அதிகாரி நியமிக்காத காரணத்தால் தமிழக விஜிலென்ஸ் கமிஷன் செயலிழந்துவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க அதிமுக அரசுக்கு மனம் வரவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் மீது எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக விஜிலென்ஸ் கமிஷனுக்கு முழுநேர ஆணையரை நியமிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி