JUST IN

Advertisement

குடும்பத்துடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிலப் பிரச்சினை தொடர்பாக உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கணவன்-மனைவி இருவரும் தங்கள் பிள்ளைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.


Advertisement

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கும் இதே பகுதியை அம்மாசி என்பவரின் குடும்பத்திற்கும் கடந்த 10 ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக பழனிசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்து, அதன் அடிப்படையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டதாகவும், ஆனால் எதிர்தரப்பினர் தொடர்ந்து தங்கள் குடும்பத்தினரை அச்சுறுத்துவதாக பழனிசாமி தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது கல்வீசி சிலர் தாக்குவதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பழனிசாமி புகார் கூறியுள்ளார். 

இந்த நிலையில் பழனிசாமி தனது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட காவல்துறையினர் 4 பேரையும் உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என பழனிசாமி குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement