திருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

லயோலா கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வரும், திருநங்கை மாணவி நளினா பிரசிதா கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்லூரி வரலாற்றிலேயே முதன்முதலாக ஒரு திருநங்கை மாணவர் தேர்தலில் வெற்றிபெற்றது இதுவே முதன்முறை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement

வெற்றி குறித்து பேசிய நளினா, '' இது ஒரு வித்தியாசமான அனுபவம். சக மாணவர்களின் நம்பிக்கையை நான் வென்றுள்ளேன் என்பதையே தேர்தல் பிரதிபலிக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிலையில் நளினாவுக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள‌ திமுக எம்பி கனிமொழி , ''சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில்  திருநங்கை சகோதரி நளினா பிரசிதா  அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement