உரிய கணினி வசதி, இருக்கைகள் இல்லை - தேர்வர்கள் தர்ணா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடைபெறும் கணிப்பொறி பயிற்றுநர்களுக்கான போட்டி தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு அனுமதி மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.


Advertisement

அரசு பள்ளிகளில் முதுநிலை கணினி ஆசிரியராகப் பணிபுரிவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக போட்டித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் இந்தத் தேர்வை சிவகங்கை மாவட்டம் பொட்டப்பாளையம் கேஎல்என் பொறியியல் கல்லூரி மையத்தில் எழுத  640 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இன்று அதிகாலையிலேயே பொட்டப்பாளையம் சென்றனர். 


Advertisement

ஆனால் தேர்வெழுத வந்த தேர்வர்களுக்கு உரிய கணினியுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்தக் கோரி தேர்வர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மீண்டும் இன்றே தேர்வை முறைப்படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் தேர்வெழுதினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement