கோவை மாவட்டம் வால்பாறை அருகே கடந்தாண்டு மூடப்பட்ட அரசுப்பள்ளி, இந்தாண்டு ஒரே ஒரு மாணவனுக்காக திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 72 துவக்கப்பள்ளிகளிள், 5 ஆதிதிராவிடர் பள்ளிகள் உள்ளன. வால்பாறை அருகே சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் சுமார் 30 குடும்பங்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்தச் சூழலில் அந்தப் பள்ளியில் படிக்க மாணவ, மாணவிகள் வராத நிலையில், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து சென்றனர். இதனால் கடந்த ஆண்டு அந்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராமையா-ராஜாலட்சுமி தம்பதியினரின் மகன் சிவா (5) என்பவரை இந்தப் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்து, கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஒரு மாணவனுக்காக சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மாணவனுக்காக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு, சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கி அந்த மாணவனுக்கு பாடம் சொல்லித்தரப்படுகிறது. சிரமம் பார்க்காமல், சிறுவனின் நலனுக்காக பள்ளியை திறந்த அரசுக்கு சின்னக்கல்லார் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?