யோகா செய்யும் அப்பா குறும்புத்தனம் செய்யும் குழந்தை - வைரல் வீடியோ

Baby-and-Father-doing-yoga-becomes-viral-in-Social-media

அப்பா குழந்தை யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, மக்கள் அன்றாடம் யோகா செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருடன் நாய்கள் யோகா செய்த வீடியோ வைரலானது. 


Advertisement

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ஒரு குழந்தையும் அவரது தந்தையும் யோகா செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அப்பா யோகா செய்யும் போது அந்த குழந்தையும் சேர்ந்து சில யோகாசனங்களை செய்வது போல காட்சிகள் உள்ளன. அத்துடன் ஒரு சில நேரங்களில் அப்பா செய்யும் யோகாசனங்களை தடுக்க முயற்சி செய்வது போல காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ பார்ப்பவர்களை மிகவும் ஆனந்தத்திற்கு உள்ளாக்குவது மட்டுமில்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement