மறைந்த பிரபல நடிகர் அம்ரிஷ் புரியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள், டூடுள் மூலம் சிறப்பித்திருக்கிறது.
கூகுள் நிறுவனம், புகழ்பெற்றவர்களை கொண்டாடும் விதமாக, அவர்கள் பிறந்த நாட்களில் டூடுள் வைத்து சிறப்பிப்பது வழக்கம். அதன்படி, பிரபல நடிகர் அம்ரிஷ் புரியின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு, டூடுள் வைத்து சிறப்பித்துள்ளது.
மறைந்த அம்ரிஷ் புரி, 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களுள் ஒருவரான அவர், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஸ்பீல்பெர்க்கின் ’இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆப் டூம்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழில், ரஜினியின் தளபதி, பாபா படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் இந்தியா, தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே, ஹீரோ, ரேஷ்மா ஆகிய இந்தி படங்கள் நடிப்புத் திறமைக்கு சான்றாக நினைவு கூறப்படுபவை. வில்லனாக நடிக்கத் தொடங்கிய அம்ரீஷ், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மறைந்த அம்ரிஷ் புரிக்கு இன்று 87 வது பிறந்த நாள். இதையொட்டி, அவருக்கு சிறப்பு டூடுள் வைத்து சிறப்பித்திருக் கிறது கூகுள்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி