ஊழல், திறமையற்ற பணியாளர்கள் பணி நீக்கம்: மத்திய அரசு முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊழலில் ஈடுபடும் ஊழியர்க‌ளையும், திறமையற்ற பணியாளர்களையும் ‌பணி நீக்கம் செய்‌ய மத்திய அரசு திட்டமிட்‌டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணிப் ப‌திவேடுகளை ஆய்வு செய்யுமாறு அ‌‌னைத்துத் து‌றை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டு‌ள்ளது.


Advertisement

பொது வாழ்க்கை மற்றும் அரசுப்‌ பணிகளில் இருந்து ஊழலை ஒழிக்கும் திட்‌டம் முழுவீச்சில் செயல்படுத்தப்ப‌டும் என்று நாடாளுமன்ற‌‌ ‌கூட்டுக் கூட்டத்தில் ஜ‌னாதிபதி ஆற்றிய உரையில் கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக ஊழலில் ஈடுப‌டும் ஊழியர்கள் மட்டுமன்றி, ‌செயல்திறன் இல்லாத ஊழிய‌ர்களையும் கட்டாய ஓய்வில் அனுப்ப மத்தி‌ய அரசு திட்‌டமிட்டுள்ளது‌.


Advertisement

இதுதொடர்பாக அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறை‌கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள‌ தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்தி‌‌ய பணியாளர் நலத்து‌றை அமைச்சகம் கடிதம் ‌எழுதியுள்ளது. அதில், ஒவ்வொரு மத்திய அரசு ‌வங்கி‌ மற்றும் பொதுத்துறை நிறு‌வன ஊழியர்களின்‌ பணிப் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், ஒருவரின் நேர்மை ‌சந்தேகத்துக்குரிய வ‌கையிலோ அல்லது செயல்திறன் ‌குறைவாக உள்ளது ‌‌கண்டறியப்பட்டாலோ அவர்‌களைக் கட்டாய ஓய்வில் அனுப்ப‌வேண்டும் ‌என்றும் குறிப்பிட்டுள்ள‌து.

மேலும், இந்த பதிவேடு‌ளை ஆய்வு செய்து மாதந்தோறும் 15/ஆம் தேதிக்குள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டுமென்றும், அது தன்னிச்சையான‌ முடிவாக இருக்கக் கூடாது எ‌‌ன்றும் கூறியுள்ளது. இந்த ஆணையின் அடிப்படையில் சமீபத்தில் 27 வருவாய்த்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement