“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த ப்ளஸ் 2 மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் மூன்று பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறையினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டீக்கா ராமன், மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.


Advertisement

மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்பிக்கும் நோக்கத்தில் ஆசிரியர்கள் வழங்கும் தண்டனை காரணமாக நடைபெறும் தற்கொலைகளை, ஆசிரியர்கள் தூண்டியதாக கருத முடியாது எனவும் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறைப்படி, ப்ளஸ் 2 முதல் கல்லூரி படிப்பு வரை படிக்கும் 15 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதற்காக ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும்  நீதிபதி தெரிவித்தார்.


Advertisement

ப்ளஸ் 1 முதல் கல்லூரி வரை படிக்கும் 19 வயதுக்கு உட்பட்ட  மாணவர்களின் மனநிலையை மதிப்பீடு செய்யும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement