JUST IN

Advertisement

பாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்ணின் 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றம் மற்றும் மருத்துவ குழுவை நாட அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடன் பழகிய இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் கருவுற்றார். அதுதொடர்பாக, பெண்ணின் தாயர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 8 வாரங்களுக்கு மேலான கருவை கலைக்க எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களுக்கு காவல்துறையினர் ஒத்துழைக்காததால் கருவை கலைக்க அனுமதிக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜூன் முதல் வாரம் பிறப்பித்த உத்தரவுபடி பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்த சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மருத்துவர்கள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழு தான் கரு கலைப்பை செய்ய முடியும் என கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்கு கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கருவை கலைக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு பிறப்பித்த பிறகு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தள்ளப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், கருக்கலைப்பு தொடர்பான மத்திய அரசு சட்டத்தின்படி 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க மட்டுமே மருத்துவ குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். கருக்கலைப்பு சட்டம் குறித்தும்,
அதுதொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பற்றி மருத்துவர்கள் மேலும் விழிப்புணர்வு பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.


Advertisement

20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க மருத்துவ குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட நிர்பந்திக்காமல் சட்டத்தின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யலாம் என அறிவுறுத்தினார். இதுதவிர 20 வாரங்களுக்கு மேல் உள்ள கருவை கலைக்க மட்டுமே உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் கருக்கலைப்பு தொடர்பாக காவல்துறையினருக்கு டிஜிபி-யும், தமிழக சுகாதார துறையிம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement