குஜராத் மாநிலத்தில் காளை ஒன்று தெருவில் வருவோரை ஆக்ரோஷமாக முட்டித் தள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் குறுகிய சாலை ஒன்றில் காளை ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த முதியவரை அந்தக் காளை பாய்ந்து சென்று முட்டியது. இதில் கீழே விழுந்த முதியவர் அச்சத்துடன் அங்கேயே நின்றிருந்தார். சற்று நேரத்தில் ஆசுவாசமான அக்காளை மீண்டும் அம்முதியவரை நோக்கி ஓடி வந்து முட்டித் தள்ளியது. அவர் செய்வது அறியாமல் தவித்தார்.
பின் அரண்டுபோய் ஓடிய அம்முதியவர் சுவருடன் ஒட்டிக்கொண்ட நிலையில் அப்போதும் அவரை விடாமல் தனது கொம்பினால் காளை முட்டியது. எனினும் அம்முதியவர் தப்பித்து ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த மாடு அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரையும் பாய்ந்து முட்டித்தள்ளியது. தெருவில் இந்தக் காளை அட்டகாசம் செய்வதை அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் அதை பிடித்துச் சென்று பட்டியில் அடைத்தனர்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி