மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், அடுத்த முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும், சிவசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பாஜக 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
“மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்தே தேர்தலை சந்திக்கிறோம். ஆனால் மாநிலம் முழுக்க எங்களது கட்சி வளார்ந்துள்ளது. இந்த வளர்ச்சி மிக நிலையானதாகவும் உள்ளது. தேர்தல் முடிந்ததும், மாநிலம் முழுக்க காவி மயமாகும் போது, மாநில முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார்” என அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாமனா’வில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக சிவசேனா செய்தித்தொடர்பாளார் சஞ்சய் ராவத் பேசும் போது ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் பதவிக்கு வருவார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார். முன்னதாக, பாஜக தலைவர் அமித் ஷா, ‘என்ன நடந்தாலும், பாஜகவைச் சேர்ந்தவர்தான் முதலமைச்சர்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவசேனா தங்கள் தரப்பிலிருந்து தான் அடுத்த முதலமைச்சர் என்று செய்தி வெளியிட்டுள்ளதால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!