ரவுடி வல்லரசு என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரவுடி வல்லரசு என்கவுன்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் மனித உரிமை ஆணைய டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கடந்த 15ம் தேதி, வியாசர்பாடி காவல்நிலைய காவலர் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் ரவுடி வல்லரசுவை பிடிக்கச் சென்றனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் பவுன்ராஜை, வல்லரசு அரிவாளால் சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த பவுன்ராஜை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

பின்னர், மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர்கள் மில்லர், ரவி உள்ளிட்டவர்கள் ரவுடியை பிடிக்கச் செ‌ன்றனர். அப்போது, உதவிக் காவல் ஆய்வாளர்கள் பிரேம்குமார், தீபன் ஆகிய இருவரையும் வல்லரசு அரிவாளால் வெட்டினார். 

இதையடுத்து ஆய்வாளர்கள், ரவுடியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்த வல்லரசு உயிரிழந்தார். ரவுடியின் கூட்டாளிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த கதிரவன் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 


Advertisement

இந்நிலையில் ரவுடி வல்லரசு என்கவுன்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 8 வாரங்களில் மனித உரிமை ஆணைய டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக பொதுத்துறைச் செயலாளர் 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது
 

loading...

Advertisement

Advertisement

Advertisement