இன்று இதுவரை முக்கிய செய்திகள் சில..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தருமபுரி மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலிருந்து வெங்காயம் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து சரிந்துள்ளது.கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையாகிறது.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியும் ஏற்கெனவே காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் 6 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்‌களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியும் வெள்ளியன்று உச்சநீதிமன்‌றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யா கந்த் அமர்வு, நாளை வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.


Advertisement

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர வெப்ப அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பாஜக ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து புதிய உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். முன்னதாக மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாரும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement